தியானம்
பிராணசக்தியை வசப்படுத்திய நிலையில் தியானம் செய்து வருவதின் மூலம் குண்டலினி சக்தியின் முழு ஆற்றலை உணர்ந்துகொள்ள முடியும். இந்த இராஜயோக தியானத்தின் வழி, உலக வாழ்க்கையில் வெற்றி அடைந்து கொண்டு ,அதே நேரத்தில் ஆன்மிகத்திலும் வெற்றி பெறலாம்.


பாதுகாப்புக்கவசம்
யோகசக்தி, வெளியில் இருக்கும் மின்காந்த சக்தியை உடலுக்குள் ஈர்த்து, அதனை மிகவும் சக்திவாய்ந்த யோக சக்தி கவசமாக உருவாக்குகின்றது. இந்த கவசம் உங்களுக்கு எல்லா விதமான ஆபத்துகளிலிருந்தும் முழுமையான பாதுகாப்பை அளிக்கின்றது, அதாவது, விபத்து, கொள்ளை, நேரடி தாக்குதல், மறைமுகமான தாக்குதல், இயற்கை பேரிடர் மற்றும் தீய சக்திகளின் தாக்கங்களிலிருந்தும் முழுமையான பாதுகாப்பை அளிக்கின்றது. .
காரியசித்தி
உங்கள் வாழ்க்கை இலட்சியங்கள் அனைத்தையும் அடைந்து விடக்கூடிய வழியாகும். நீங்கள் அடைய நினைக்கும் ஒவ்வொரு இலட்சியமும் வாழ்க்கையில் நிகழ்வதற்கான சாதகமான சூழ்நிலையை உங்களுக்கு உருவாக்கிக் கொடுக்கின்றது யோகசக்தி. இதன்வழி, நீங்கள் விரும்பும் வாழ்க்கையை நீங்கள் வாழலாம்.


மனச்சுமையை வெளியாக்குதல்
ஆழ்மனதில் உள்ள எல்லா விதமான தடைகளையும் மனதைப் பாதித்த பதிவுகளையும் நிரந்தரமாக வெளியாக்கிக் கொள்ளும் வழியாகும். வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களுக்கும் தோல்விகளுக்கும், ஆழ்மனதில் உள்ள இந்த தடைகளும் பாதிப்பான பதிவுகளும் தான் மூலக்காரணமாக இருக்கின்றன. ஆகவே, இவைகளை வெளியேற்றிக்கொள்வதினால் உங்களுக்கு மன நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படுகின்றது.
கற்கும் ஆற்றல்
ஞாபகசக்தியை அதிகரித்து, நினைவுகூரும் ஆற்றல் மேம்பட்டு, கல்வியில் சிறந்து விளங்க உதவும் யுத்தி. யோக சக்தியை பயன்படுத்தி நீங்கள் படிக்கும் பொழுது, உங்கள் அடைவுநிலை இலக்கு மேலே மேலே உயந்து கொண்டே , படிப்பதும் உண்மையான மகிழ்ச்சியை அளிக்கும்.


சுய நோய் நீக்கம்
யோக சக்தியை பயன்படுத்தி, எந்தவித நோயாக இருந்தாலும் கட்டுப்ப டுத்திவிடலாம் அல்லது முழுமையாக குணப்படுத்திவிடலாம். யோகசக்தியின் இந்த அற்புதமான குணப்படுத்தும் ஆற்றலைக் கொண்டு வாழ்க்கையில் நீங்கள் ஆரோக்கியமாகவும், சுறு சுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் வாழலாம். எந்த நோயாக இருந்தாலும், யோக சக்தியை பயன்படுத்தி, எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி குணப்படுத்திக்கொள்ளலாம்.
குடும்பத்தார்களுக்கு நோய் நீக்கம்
யோக சக்தியைக் கொண்டு குடும்பத்தில் உள்ள உறுப்பிணர்கலுக்கும் இருக்கும் எவ்வித நோயாக இருந்தாலும் குணப்படுத்தி விடலாம். அது எவ்வளவு நாள் பட்ட நோயாகவும் இருக்கலாம் அல்லது குணப்படுத்த முடியாத நிலையில் உள்ள நோயாகவும் இருக்கலாம். உங்கள் குடும்பத்தார்கள் உங்கள் அருகாமையில் இருந்தாலும் சரி அல்லது தொலைதூரத்தில் இருந்தாலும் சரி, யோக சக்தியைப் பயன்படுத்தி அவர்களை முழுமையாகக் குணப்படுத்தி விடலாம்.
