
“ஆர்பிடி”யின் மகத்துவம்
அன்பின் வடிவம் “ஆர்பிடி”
அனைவரும் மகிழும் “ஆர்பிடி”
குருவருளும் இறையருளும் நிறைந்தது “ஆர்பிடி”
சோதனையை சாதனையாக்கிடும் உறுப்பினர் கொண்டது “ஆர்பிடி”
டத்தோ ஸ்ரீ குருஜி, டத்தின் ஸ்ரீ ஜி வாழும் இல்லமாம் “ஆர்பிடி”
ஒளிச்சுடர்
தன்னம்பிக்கையே வாழ்க்கை
இறை நம்பிக்கையே வாழ்வில் உயர்வு, மகிழ்ச்சி,இன்பம்
குருவே ஆன்மீகம்,
அன்பின் வழியே வெற்றியின் ரகசியம்
ஞானச்சுடர்
உன்மேல் நம்பிக்கை வை, மா பெரும் வலிமையை உணர்வாய்
இறைவன்மேல் நம்பிக்கை வை , அனைத்து துன்பங்களையும் வெல்வாய்
குருவின்மேல் நம்பிக்கை வை,உனக்குள் இருக்கும் அனைத்து சக்திகளையும் உணர்வாய்
வாழ்க்கையில் துணிவுடனும்,விவேகத்துடனும் செயல்படு,அனைத்து வெற்றியும் பெறுவாய்
ஆன்மீக வழியில் அன்புடனும்,உறுதியுடனும்,பொறுமையுடனும் , அசையா மனதுடனும் சென்றால் ஞானத்தை உணர்ந்து இன்பத்தைக் காண்பாய்
ஞான ஒளி
வந்தோமே மானிடராய் ,வாழ்ந்தோமே மாயை என்னும் வாழ்க்கையிலே,
வந்து போகும் வாழ்க்கையிலே,பிறப்பு இறப்பு இயற்கையிலே,
துன்பம் துயரம் உனக்கு இல்லை!
மாயத் தாயின் மடியினிலே, தினம் தினம் குழந்தையாய் இருந்திடுவோமே !
மாயத் தாயின் கருணையால் , அனைத்தும் நாம் அறிந்திடுவோமே !
உனக்குள் இருக்கும் ஆதிசக்தியை, தினம் தினம் தியானித்து,
விடுதலை அடைந்திடுவோமே
மகிழ்ச்சியெனும் வாழ்வினை அடைந்தோமே,
என்னுள்ளே உணர்வாய்,ஒளியாய் இருப்பவனை, அனுதினமும் தியானித்து
அனைத்து இன்பமும் அடைவீரே!
அமுத மொழி ( I )
அன்பே குருவின் மகிமை,
குருவே யோக ஞானம்,
குருவே ஞான சித்தி,
குருவே அகில உலக யோக ஞான தியானப் பயிற்சி முதன்மை சித்தர்,
குருவே மஹா சக்தி
அமுத மொழி( II )
குரு நாமம் சொன்னால் துன்பங்கள் நீங்குமே,
குரு நாமம் சொன்னால் நன்மைகள் யாவும் வந்து சேருமே,
குரு நாமம் சொன்னால் தீய சக்திகள் அழியுமே,
குரு நாமம் சொன்னால் பாவங்கள் நீங்குமே,
குரு நாமம் சொன்னால் இறைக் கதி கிட்டுமே,
அன்பே உருவானவரே நமது குருநாதரே,
அகில உலக யோக ஞான தியானப் பயிற்சி முதன்மை சித்தர்
அமுத மொழி ( III )
அன்பு , தூய்மை,
குரு பக்தி, இறை பக்தி,
இதுவே யோக சக்தியினை முழுமையாக உணர்ந்து,
வெற்றி பெறுவதின் இரகசியம்!