“ஆர்பிடி”யைப் பற்றி

ஆர்.பி.டி இயக்கம் 1996 முதல் மலேசியாவில் இயங்கி வரும் ஒரு அமைப்பாகும். ஆர்பி ஒரு மிக சக்திவாய்ந்த வாழும் சித்தரால் அமைக்கப்பெற்று தலைமை தாங்கப்படுகிறது , அவர் ஆழ்நிலை  ராஜயோக பாதையை பின்பற்றி அனைத்து அற்புதமான திறன்களையும் பெற்றுள்ளார். ஆர்.பி.டி அதன் நோக்கத்தை சிறப்பாக செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க நற்பெயரைப் பெற்றுள்ளது.இந்த சகாப்தத்தின் மிகப் பெரிய சத்குரு, ஆன்மீக சத்தியத்தின் உயிருள்ள உருவம், மனித குலத்தை ரட்சிக்க யோகா ஞான சித்தர் ஓம் ஸ்ரீ ராஜயோக குரு, என்ற புனித நாமத்துடன் வந்துள்ளார்.உலகளாவிய ராஜாயோக சக்தி நிறைந்த ஆழ்நிலை தியான இயக்கத்தின் நிறுவனர், வாழும் சித்தர் டத்தோ ஸ்ரீ டாக்டர் வி.பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்ட புனித நாமம் இது.தெய்வீக சத்குரு டத்தோ ஸ்ரீ குருஜி என்றும் அன்பாக அழைக்கப்படுகிறார்.

“ஆர்பிடி” இயக்கம் சித்தர்கள் இராஜயோக மார்கத்தின் வழி கடைப்பிடித்த பிராண சக்தியை எளிய முறையில் வசப்படுத்தி நம்உள்ளிருக்கும் யோக சக்தியை எழுப்பும் நுட்பத்தை கற்றுத்தரும் ஒரு நாள் கருத்தரங்கினை ஏற்பாடு செய்து நடத்திவருகிறது.மனிதன் தனது உலக வாழ்க்கையிலும் ஆன்மிகத்திலும் சிறப்பான நிலையை யோக சக்தி கலந்த தியானத்தின் மூலம் சில பயிற்சி முறைகளின் வழியாக பெற முடியும் என்பதை மிக உன்னதமான முறையில் போதித்து வருகிறது.  அனைத்து நிலைகளையும் சேர்ந்த பன்னாட்டு மக்கள் இந்த யோக சக்தி பயிற்சியை மேற்கொண்டு பல நன்மைகளை அடைந்துள்ளனர். பொதுமக்கள், நிபுணர்கள், மாணவர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட இன்னும் பலர், அதாவது, குறைந்த வருமானம் பெறுபவர்களிலிருந்து செல்வந்தர்கள் வரை இந்த யோக சக்தி பயிற்சியை பயன்படுத்தி வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள்.

. அனைத்து நிலைகளையும் சேர்ந்த பன்னாட்டு மக்கள் இந்த யோக சக்தி பயிற்சியை மேற்கொண்டு பல நன்மைகளை அடைந்துள்ளனர். பொதுமக்கள், நிபுணர்கள், மாணவர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட இன்னும் பலர், அதாவது, குறைந்த வருமானம் பெறுபவர்களிலிருந்து செல்வந்தர்கள் வரை இந்த யோக சக்தி பயிற்சியை பயன்படுத்தி வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள்.

மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதற்கிணங்க, “ஆர்பிடி” அதன் இயக்கம் வாயிலாக மக்களுக்கு பயனளிக்கும் பல சமூக சேவை நடவடிக்கைகளை இலவசமாக மேற்க்கொண்டு வருகிறது. “ஆர்பிடி” இயக்கத்தின் தலைவராகிய டத்தோ ஸ்ரீ குருஜி மற்றும் அவரின் துணைவியார், டத்தின் ஸ்ரீ சுந்தரி அவர்களின் தலைமையில், இரத்ததான முகாம், மகா அன்னதானம், தனித்து வாழும் தாய்மார்களுக்கு பொருளுதவி, கல்வியில் சிறப்பு தேர்ச்சிப் பெற்ற ஏழை மாணவர்களுக்கு பொருளுதவி, முதியோர் மற்றும் அனாதை இல்லங்களுக்கு பொருளுதவி, பள்ளிகளுக்கு நன்கொடை வழங்குதல், ஆலய திருப்பணிக்கு நன்கொடை வழங்குதல், போன்ற பல சேவைகளை மக்களுக்குச் செய்து வருகிறது. இதைத் தவிர்த்து, உறுப்பினர்கள் வாயிலாகவும் “ஆர்பிடி” இயக்கம் பல சமூக சேவைகளை செய்து வருகிறது, குறிப்பாக, நாடுத் தழுவிய நிலையில், மாணவர்களுக்கான இலவச கல்வி கருத்தரங்கு, இலவச மருத்துவ முகாம், என மனிதநேய அடிப்படையிலான பல விஷயங்களை மக்கள் நலனுக்காக செய்து வருகிறது. மலேசியாவைத் தவிர்த்து, சிங்கப்பூர், இந்தியா, லண்டன், ஆஸ்த்ரேலியா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் “ஆர்பிடி” உறுப்பினர்களும் இவ்வகையான சமூக சேவைகளை செய்து வருகிறார்கள்.

ஒரு மனிதனுக்கு உலக வாழ்க்கை தேவைகளும் ஆன்மிக வளர்ச்சியும் இன்றியமையாதது. மனிதன் தன் பிறப்பின் பயனை அடைய இந்த இருநிலைகளையும் ஒருசேர முறையாக கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொரு ஆன்மாவிலும் தெய்வீகம் ஒளிந்து கிடக்கிறது. அந்த தெய்வீக சக்தியை வெளிக்கொண்டு முக்தி அடைவது தான் மனித பிறப்பின் இலட்சியமாகும். இதற்கு இறைவனின் தொடர்பு மிக மிக அவசியமாகும். இந்தப் புனிதம் வாய்ந்த ஆன்மீகப் பயணம் முழுமைப் பெற நமக்கு சரியான வழிகாட்டுதல் இன்றியமையாததாகும்.