குரு பற்றி

உலக அளவில் அங்கீகாரம் பெற்ற சித்தராகிய,தெய்வீக சத்குரு யோக ஞான சித்தர் ஓம் ஸ்ரீ ராஜயோக குரு அவர்கள்,பண்டைய கால ஆன்மீக இரகசியங்களைக் கற்றுத் தேர்ந்து,தற்சமயம் சாதாரன மக்களும் மிக உன்னதமான சக்தியான யோக சக்தியை வசப்படுத்தி,உலக வாழ்க்கையிலும் ஆன்மீகத்திலும் வெற்றி  பெறும் வழிமுறைகளை கற்றுத் தருகிறார்கள் . நமது குருநாதர்,யோக ஞான சித்தர் ஓம் ஸ்ரீ ராஜயோக குரு அவர்கள்,இக்கால கட்டத்தில் மனித குலத்தை ஆசிர்வதிக்கவும் கரை சேர்க்கவும் தோன்றியுள்ளார்கள்.மலேசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட யோக ஞான சித்தர் ஓம் ஸ்ரீ ராஜயோக குரு அவர்கள்,ஆசியக் கண்டம் முழுவதும் டத்தோ ஸ்ரீ குருஜி என்று அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.குரு அவர்களின் ஆன்மிகப் பயணம் சிறு வயதிலேயே ஆரம்பமாகிவிட்டது.சிறுவயது முதற்கொண்டே குரு அவர்களுக்கு இறைவனைக் காண வேண்டும் என்ற தணியாத தாகம் ஏற்பட்டது.ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்து,குரு அவர்கள் இறை வழிப்பாட்டிற்காக நேரத்தை அதிகம் செலவு செய்து வந்தார்கள்.இறைவனை எப்படியாவது பார்க்க வேண்டும் என்பதற்காக,தீவிர பிரார்த்தனை மற்றும் பயிற்சி முறைகள் அனைத்தையும் குரு அவர்கள் செய்து வந்தார்கள்.

ஆரம்ப நிலையிலேயே,தமக்குள்ளே ஏதோ ஒரு அபூர்வ சக்தி தம்மை இயக்கிக் கொண்டிருப்பதை தெளிவாக உணர்ந்தார்கள்.சிறிது காலம் சென்ற பிறகு, விடாமுயற்சியின் பயனாக,குரு அவர்களுக்குப் பல தெய்வீக நிலைகளும் ஆற்றல்களும் தோன்றின. இவ்வாற்றல் இறைவனைக் காண வேண்டும் என்ற குரு அவர்களின் ஆவலை இன்னும் அதிகமாக்கியது.அதன் விளைவு, குரு அவர்கள் தமது ஆன்மீகத்தாகத்தைத் தீர்த்து வைக்கக்கூடிய ஓர் உண்மையான நிலை பெற்ற ஆன்மிக குருவைத் தேடலானார்கள்.இக்கால கட்டத்தில், மதிப்பிற்குரிய டத்தின் ஸ்ரீ சுந்தரி அவர்களைக் கரம் பிடித்த குரு அவர்கள், ஒரு தருணத்தில் வாழ்க்கையில் எது அத்தியாவசியத் தேவை என்று தீர்மாணிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆன்மிக தேடலைப் பூர்த்தி செய்யும் அதே வேளை, குடும்ப பொறுப்புகளையும் தேவைகளையும் நிறைவேற்றும் கடப்பாடும் இருந்த காரணத்தால், குரு அவர்கள் ஒன்றைவிட்டு மற்றொன்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாத ஓர் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தார்கள். அத்தருணத்தில், டத்தின் ஸ்ரீ சுந்தரி அவர்கள், குரு அவர்களின் ஆன்மிக வேள்விக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். ஓர் உண்மையான ஆன்மிக குருவைத் தேடும் பணி, குரு அவர்களுக்கு மிகவும் சவால் மிக்கதாக இருந்தது. அந்தத் தேடலில், குரு அவர்கள் பல போலி குருமார்களிடம் மாட்டிக் கொண்டு அல்லல்பட்டார்கள் என்பதும் குறிப்பிட தக்கது.ஒரு வழியாக போலி குருமார்களின் பிடியிலிருந்து தப்பித்த குரு அவர்களுக்கு, சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசம் ஒன்று கண்ணில் தென்பட்டது. அதில்,”இறைவனிடத்தில் உண்மையாக பிரார்த்தனை செய்து வந்தால், இறைவனே ஓர் உண்மையான குருவைக் காட்டுவார்” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த உபதேசத்தை உறுதியாக மனதில் நிறுத்தி, குரு அவர்கள் விடாமுயற்சியுடன் தீவிரமாக வழிபாடு செய்ய ஆரம்பித்து பலனும் கண்டார்கள். குரு அவர்களுக்கு இந்தியாவிலிருந்து வந்த ஒரு சிவயோகியின் தொடர்பு ஏற்பட்டு, அவரிடமிருந்து ஜபதபம் மூலமாக இறைவனை உணரக்கூடிய மார்கத்தை உபதேசம் பெற்றார்கள். பல வருடங்களுக்குப் பிறகு அடைய வேண்டிய அந்த மார்கத்தில் சொல்லப்பட்டிருக்கும் மிக உயர்வான நிலைகளை, குரு அவர்கள் ஆறு வாரங்களிலேயே அடைந்து விட்டார்கள்.பல அபார சக்திகள் பெற்றும், குரு அவர்களின் ஆன்மிக தாகம் இன்னும் தீராத வண்ணம் தான் இருந்தது. சிறிது காலத்தில், இந்தியாவிலுள்ள ரிஷிகேஷத்திலிருந்து வந்த ஒரு மிகப் பெரிய சிவயோகியின் தொடர்பு குரு அவர்களுக்குக் கிட்டியது.

அந்தச் சிவயோகி, எதிர்காலத்தில் குரு அவர்கள் உலக மக்களுக்கு குண்டலினி சக்தியை வழங்குவார்கள் என்று கூறி, ‘யோக ஞான சித்தர் ஓம் ஸ்ரீ ராஜயோக குரு ‘ என்ற நாமத்தை குரு அவர்களுக்குச் சூட்டினார். அந்நேரத்தில் , குரு அவர்களின் வாழ்க்கை சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது ,அது  ஒரு விந்தையாக இருந்தாலும், குரு அவர்கள் அந்த சிவயோகி கற்றுக் கொடுத்த தியான பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தார்கள்.குரு அவர்கள் யோக சக்தி பயிற்சி முறைகளைக் கொண்டு வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொண்டார்கள். கடின உழைப்பினாலும் தீவிர ஆராய்ச்சியினாலும் குரு அவர்கள் பயிற்சி முறைகளைச் செம்மைப்படுத்தி, உடல் ஆரோக்கியம், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைக் களைந்தார்கள்.

நீண்ட நாள் ஆராய்ச்சிக்குப் பிறகு , குரு அவர்கள் யோக சக்தி பயிற்சி முறைகளைக் குறிப்பிட்ட ஒரு சில நபர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இந்தப் பயிற்சி முறைகள் அளித்த அபரிமிதமான நன்மைகளைக் கண்ட டத்தின் ஸ்ரீ சுந்தரி அவர்கள் , முறையான கருத்தரங்கு வாயிலாக குரு அவர்கள் தாம் பெற்ற ஆன்மிக அனுபவங்களைப் பெண்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுடனும் பகிர்ந்துகொள்ளும்மாறு பரிந்துரை செய்தார்கள். மேலும், தீவிர ஆராய்ச்சியின் பயனாக, குரு அவர்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற வண்ணம் , பயிற்சி முறைகளை எளிதாக்கி செம்மைப்படுத்தினார்கள்.உலக மக்கள் அனைவரும் உலக வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து கொண்டு இறை நிலையை அடைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், குரு அவர்கள் ‘ஆர்பிடியின்’ யோக சக்தி கருத்தரங்குகளை வழி நடத்த ஆரம்பித்தார்கள்.

சுய அனுபவம் மற்றும் 27 வருட கால ஆராய்ச்சியின் அடிப்படையில் , இந்த 21-ஆம் நூற்றாண்டின் நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ப , குரு அவர்கள் தியான பயிற்சியை எளிதான, சக்தி வாய்ந்த மற்றும் பயன்மிக்க முறையில் போதித்து வருகிறார்கள். பிராணாயாமப் பயிற்சியின் வாயிலாக பிராணசக்தியை வசப்படுத்தும் கலையைக் குரு அவர்கள் சுலபமான முறையில், எந்தக் கடுமையான கட்டுப்பாடுகளும் இன்றி கற்றுத் தருகிறார்கள். இந்தப் பயிற்சி முறைகள், உடல் ஆரோக்கியம், கல்வி, பொருளாதாரம் மற்றும் மன மகிழ்ச்சி போன்ற உன்னதமான நிலைகளை உருவாக்குகின்றன. எனினும், குரு அவர்களின் துணைவியார் மதிப்பிற்குரிய டத்தின் ஸ்ரீ சுந்தரி அவர்களின் ஒத்துழைப்பு, ஆதரவு, அன்பு, சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு மற்றும் அனுசரணை இல்லாவிடில், இவை அனைத்தும் நடப்பதற்கு சாத்தியமே இல்லை.

குரு அவர்களின் அபார சாதனைகள் மற்றும் சமுதாயத்திற்கு ஆற்றியிருக்கும் சேவையை அங்கீகரிக்கும் பொருட்டு, 2004-ஆம் ஆண்டு, குரு அவர்களுக்கு ‘Darjah Indera Mahkota Pahang’ (D.I.M.P.) விருது வழங்கப்பட்டு, ‘டத்தோ’ பட்டமும் கொடுப்பட்டது. மறு வருடம், குரு அவர்களுக்கு ‘Sri Sultan Ahmad Shah’ (S.S.A.P.) விருது வழங்கப்பட்டு டத்தோ ஸ்ரீ பட்டம் கொடுத்து கெளரவிக்கப்பட்டது. .குரு அவர்களின் சேவை உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.2014-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் , அமெரிக்காவிலுள்ள உலகத் தமிழ் பல்கலைக்கழகம் (யு.எஸ்.ஏ), மனிதக்குலத்தின் மேம்பாட்டிற்கும் ஆன்மிக வளர்ச்சிக்கும் குரு அவர்கள் ஆற்றிருக்கும் ஒப்பற்ற பங்களிப்பிற்காக, குரு அவர்களுக்கு ‘மதிப்புறு முனைவர்’ பட்டம் வழங்கியது. இந்தியாவின் பன்னாட்டு தொலைக்காட்சியான மக்கள் தொலைக்காட்சி, வாராந்திர நிகழ்ச்சியான ‘நலம் தரும் யோகம்’ எனும் நிகழ்ச்சியை 52 வாரங்கள் ஒளிப்பரப்பு செய்தது . இந்த நிகழ்ச்சியில் குரு அவர்கள் முதன்மை விருந்தினராக வலம் வந்து உரையாற்றினார்கள்.

இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உலகின் பல நாடுகளில் வாழும் மக்கள் கண்டுகளித்தார்கள். மேலும், இணையம் வாயிலாகவும் இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கலாம். மக்களின் வற்றாத ஆதரவின் பேரில், குரு அவர்கள் உலகம் முழுதும் உள்ள பல இடங்களில், குறிப்பாக பினாங்கு, கோலாலம்பூர், ஜொகூர்பாரு, லண்டன் மற்றும் சிங்கப்பூரில் பல ஆண்டுகளாக நடத்திவரும் பயிற்சிகளைக் கருத்தில் கொண்டு, டெல்லித் தமிழ்ச் சங்கம் குரு அவர்களுக்கு மிக உயரிய கௌரவமாகிய ‘அகில உலக யோக ஞான தியான பயிற்சி முதன்மை சித்தர்’ என்ற விருதை வழங்கி சிறப்பித்தது.

குரு அவர்கள், மக்கள் வாழ்க்கையில் சிறப்படையும் வழி முறையை போதிப்பது மட்டுமின்றி, பிறருக்கு தீங்கு செய்வதை விட்டொழிக்க வேண்டும் என்பதனையும் முடிந்த அளவிற்கு பிறருக்கு நன்மை செய்ய முன் வரவேண்டும் என்பதனையும் போதித்து வருகிறார். இந்த மனித நேய சிந்தனையைச் செயல்படுத்தும் பொருட்டு, குரு அவர்கள் ‘ஆர்பிடி’ தியான இயக்கத்தைத் தோற்றுவித்தார்கள். இந்த சங்கத்தின் முதன்மை நோக்கம், சமூக சேவை நடவடிக்கைகளை ஏற்று நடத்துவது மற்றும் மனித நேயம் அடிப்படையிலான நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதும் ஆகும். இந்த இயக்கத்தின் வாயிலாக , ‘ஆர்பிடி’ கருத்தரங்குகளில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள், பொது மக்களுக்கு பயனளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

ஆர்பிடி தியான இயக்கம், 2007-ஆம் ஆண்டு, டத்தோ ஸ்ரீ குருஜி மற்றும் டத்தின் ஸ்ரீ ஜி சுந்தரி அவர்களின் தலைமையில், மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக இரத்த தான முகாம் ஒன்றை மிக விமர்சையாக கோலாலம்பூரில் ஏற்பாடு செய்து நடத்தியது. தன்னார்வளர்களால் நடத்தபட்ட இந்த நிகழ்வில், மிக அதிகமான இரத்த தானம் கிடைக்கப் பெற்றமைக்கு , இந்த நிகழ்வு மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. இதைத் தவிர்த்து, வழிபாட்டுத் தளங்களுக்கு , பள்ளிகளுக்கு மற்றும் ஏழை குடும்பங்களுக்கு நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வுகளில் சிறப்பு தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. தேவைக்கு ஏற்ப, இலவச மருத்துவ முகாம்கள் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகின்றன. இயற்கை பேரிடர் நிவாரணம் , மருத்துவ உதவி, UNICEF போன்ற நிவாரண நிதிக்கு பண உதவி வழங்குதல் , அடிப்படை தேவைகளுக்கான பொருட்கள் வழங்குதல் போன்ற மனித நேய நடவடிக்கைகளும் மேற்கொள்ள பட்டுள்ளன . ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60,000 பேர் கலந்துகொள்ளும் மகா அன்னதானம் நிகழ்வு வருடாந்திர நிகழ்வாக கடந்த 2006-ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகின்றது. இம்மாதிரியான சமூக சேவை நிகழ்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

இன்று, மலேசியா, இந்தியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஹங்கேரி, அமெரிக்கா, யுனைடெட் கிங்டம் (யு.கே.) ஊள்ளிட்ட உலகிலுள்ள பல நாடுகளிலும் பல லட்சம் குருவின்  சீடர்கள் மகிழ்ச்சியாகவும் சுபிட்சமாகவும் வாழ்ந்து வரும் அதே வேளை ,ஆன்மீக  பாதையிலும் பீடுநடை போட்டு வருகிறார்கள்